இங்கிலாந்தில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு? - ENG vs IND டெஸ்ட்

இங்கிலாந்தில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு? - ENG vs IND டெஸ்ட்
Updated on
1 min read

லீட்ஸ்: இந்தியா உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணி வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் குறித்து பார்ப்போம்.

லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் சதம் விளாசினர். இதன் மூலம் 364 ரன்களை இந்தியா எட்டியது. முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் என்ற முன்னிலையை இந்தியா பெற்றது. இதனால் இந்த ஆட்டத்தில் 371 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டி வருகிறது.

4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்களில் 21 ரன்களை இங்கிலாந்து எட்டியுள்ளது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 350 ரன்கள் மட்டுமே தேவை. அந்த அணியின் கைவசம் 10 விக்கெட் உள்ளது. இந்தியா வெற்றி பெற இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும்.

இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் விவரம்:

>கடந்த 1948-ல் இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் 404 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா வெற்றிகரமாக எட்டியிருந்தது. இந்தப் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. 7 விக்கெட்டுகளில் ஆஸி. வாகை சூடியது.

>கடந்த 2022-ம் ஆண்டு இந்திய அணி உடனான போட்டியில் 378 ரன்கள் இலக்கை இங்கிலாந்து கடந்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்றது.

>2019-ல் லீட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை 1 விக்கெட்டில் வீழ்த்தியது இங்கிலாந்து. இந்த ஆட்டத்தில் 359 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து எட்டியது.

>1984-ல் லார்ட்ஸ் மைதானத்தில் 342 ரன்கள் இலக்கை கடந்து இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

>கடந்த 2017-ல் லீட்ஸ் மைதானத்தில் 322 ரன்களை எட்டி இங்கிலாந்தை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in