Published : 16 Jun 2025 07:22 AM
Last Updated : 16 Jun 2025 07:22 AM

இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் மோதும் ஒரு​நாள், டி20 தொடர் அட்​ட​வணை அறி​விப்பு

மும்பை: இந்​தி​யா, நியூஸிலாந்து அணி​கள் மோதும் ஒரு​நாள், டி20 கிரிக்​கெட் போட்டி தொடர் நடை​பெறும் தேதி​களை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம்​(பிசிசிஐ) அறி​வித்​துள்​ளது.

நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து டி20, ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரில் விளை​யாட உள்​ளது.

இரு அணி​களும், மொத்​தம் 3 ஒரு​நாள் போட்டி மற்​றும் 5 சர்​வ​தேச டி20 போட்​டிகளில் மோத உள்​ளன. சர்​வ​தேச டி20 உலக கோப்பை கிரிக்​கெட் போட்​டிக்கு முன்​ன​தாக இந்த தொடர் நடை​பெறுகிறது.

ஜனவரி 11-ம் தேதி இந்த போட்டி தொடர் தொடங்கு​கிறது. முதலில் ஒரு​நாள் போட்​டிகளும், அதைத் தொடர்ந்து டி20 கிரிக்​கெட் தொடரும் நடை​பெறும். இந்​நிலை​யில் இந்​தி​யா - நியூஸிலாந்து மோதும் போட்​டிகளுக்​கான இடங்​களை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் (பிசிசிஐ) அறி​வித்​துள்​ளது.

அதன்​படி பரோ​டா, ராஜ்கோட், இந்​தூர் ஆகிய இடங்​களில் ஒரு​நாள் போட்​டிகளும், நாக்​பூர், ராய்ப்​பூர், குவாஹாட்​டி, விசாகப்​பட்​டினம், திரு​வனந்​த​புரம் ஆகிய இடங்​களில் டி20 ஆட்​டங்​களும் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x