Last Updated : 14 Jun, 2025 11:30 AM

 

Published : 14 Jun 2025 11:30 AM
Last Updated : 14 Jun 2025 11:30 AM

‘நீ சிங்கம்தான்’ - தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவை போற்றும் ரசிகர்கள்!

லண்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தரமான இன்னிங்ஸ் ஒன்றை அரங்கேற்றம் செய்துள்ளார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா. இடது காலின் தொடை பகுதியில் உடல் ரீதியான பின்னடைவு இருந்த போதும் அதை தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியினால் வென்று காட்டி உள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக சதம் பதிவு செய்த முதல் கருப்பின வீரர் என பவுமா அறியப்படுகிறார். 2014-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த அணிக்காக கருப்பினத்தை சேர்ந்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை பதிவு செய்துள்ளனர். அதில் நான்கு சதங்களை பவுமா பதிவு செய்துள்ளார். அந்த அணியில் கருப்பின பவுலர்களின் ஆதிக்கம் இருந்தாலும் பேட்டிங்கில் அது இல்லாமல் போனது. அதை உடைத்தவர் பவுமா.

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பவுமா பெற்றுள்ளார். இதோ 9-வது வெற்றியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நெருங்கிவிட்டார். அவர் தலைமையிலான அணி தோல்வியை தழுவியது இல்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 65 ரன்களை எடுத்துள்ளார். இன்னிங்ஸின் தொடக்கத்தில் சில தடுமாற்றம் இருந்தது. அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆஸி. வீரர் ஸ்மித் நழுவ விட்டார். அதை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை மார்க்ரம் உடன் ஆடினார். அது பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் 30 பந்துகளை ரன் ஏதும் எடுக்காமல் ஆடினார். அவரது எடுத்த முதல் ரன்னை லார்ட்ஸ் பார்வையாளர்கள் போற்றினர். அதே தான் மூன்றாம் நாள் ஆட்ட முடிவிலும் நடந்தது. அதோடு சமூக வலைதளங்களிலும் அவரது போராட்ட இன்னிங்ஸை ‘நீ சிங்கம்தான்’ என ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் 8 விக்கெட் உள்ளது. அந்த அணி வெற்றிக் கோட்டை கடந்தால் 1998 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு ஐசிசி தொடரை வெல்லும் முதல் தென் ஆப்பிரிக்க கேப்டன், முதல் கருப்பின கேப்டன் போன்ற வரலாற்று சாதனைகளை பவுமா புரிவார். இப்போதே தென் ஆப்பிரிக்க அணிக்காக ரக்பியில் அடுத்தடுத்து இரண்டு முறை உலகக் கோப்பையை வென்று கொடுத்த கருப்பினத்தை சேர்ந்த கொலிசி உடன் பலரும் பவுமாவை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்த இறுதிப் போட்டியின் டாஸ் வீசும் போது கூட ஆஸி. கேப்டன் கம்மின்ஸின் உயரத்தோடு ஒப்பிட்டு பவுமா கிண்டல் செய்யப்பட்டார். இப்போது அப்படி பேசியவர்களை தனது செயல்பாட்டால் வாயடைக்க செய்துள்ளார்.

‘Oh, தெம்பா பவுமா’...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x