யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

Published on

ஸ்டட்கர்ட்: ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் பாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி மெக்சிகோவின் சாண்டியாகோ கோன்சலஸ், அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் மோதியது. ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-7 (5), 6-7 (5) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in