சேப்பாக் கில்லீஸ் அணிக்கு 2-வது வெற்றி!

சேப்பாக் கில்லீஸ் அணிக்கு 2-வது வெற்றி!
Updated on
1 min read

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் சய்த சேப்பாக் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. ஆஷிக் 38 பந்துகளில், 54 ரன்களும் விஜய் சங்கர் 24 பந்துகளில், 47 ரன்களும், ஸ்வப்னில் சிங் 14 பந்துகளில், 45 ரன்களும் கேப்டன் பாபா அபராஜித் 29 பந்துகளில், 41 ரன்களும் விளாசினர். நெல்லை அணி சார்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

213 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் அருண் கார்த்திக் 51, முகமது அட்னான் கான் 48 ரன்கள் சேர்த்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அபிஷேக் தன்வார் 3 விக்கெட்களையும் ஸ்வப்னில் சிங், சிலம்பரசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சேப்பாக் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in