பஞ்சாப் அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை | Qualifier 2

பஞ்சாப் அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை | Qualifier 2
Updated on
1 min read

ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் தகுதி சுற்று 2 ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன் மூலம் முதலில் பேட்டிங் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ரோஹித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரோஹில் எட்டு ரன்களில் வைஷாக் விஜய்குமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மறுமுனையில் ஆடிய பேர்ஸ்டோ 38 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் கூட்டணி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 44 ரன்கள் விளாசி வெளியேறினர். ஹர்திக் பாண்டியா 15, நமன் தீர் 37, ராஜ் பாவா 8 என 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in