பிரதமர் மோடியை சந்தித்த வைபவ் சூர்யவன்ஷி!

பிரதமர் மோடியை சந்தித்த வைபவ் சூர்யவன்ஷி!
Updated on
1 min read

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி பிஹார் மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர், தனது எக்ஸ் வலைதளத்தில், இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை பாட்னா விமான நிலையத்தில் சந்தித்த படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “பாட்னா விமான நிலையத்தில் இளம் கிரிக்கெட்டர் வைபவ் சூர்யவன்ஷியையும் அவரது குடும்பத்தையும் சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுகிறது. அவரது வருங்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

14 வயதான சூர்யவன்ஷி பிஹார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர். நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in