Published : 24 May 2025 12:46 PM
Last Updated : 24 May 2025 12:46 PM

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 65-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 18-ம் நிலை வீரரான பிரான்ஸின் டோமா ஜூனியர் போபோவை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 24-22, 17-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அரை இறுதியில் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுஷி தனகாவுடன் மோதுகிறார். கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 22-24, 13-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஜியாங் ஷென் பாங், வெய் யா ஷின் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x