இஷான் கிஷன் அதிரடியில் ஆர்சிபி-ஐ வீழ்த்தியது ஹைதராபாத் | IPL 2025

இஷான் கிஷன் அதிரடியில் ஆர்சிபி-ஐ வீழ்த்தியது ஹைதராபாத் | IPL 2025
Updated on
1 min read

ஐபிஎல் 2025 தொடரின் 65வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் ஓப்பனிங் ஆடினர். இதில் அபிஷேக் சர்மா 34 ரன்களும், டிராவிஸ் ஹெட் 17 ரன்களும் எடுத்து வெளியேறினர். 4வது ஓவரில் இறங்கிய இஷான் கிஷன் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 94 ரன்கள் விளாசினார். கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

கிளாசன் 24, அனிகேத் வர்மா 26, நிதிஷ் குமார் ரெட்டி 4, அபினவ் மனோகர் 12, பேட் கம்மின்ஸ் 13 என 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

அடுத்து இறங்கிய ஆர்சிபி அணியில் ஓப்பனிங் வீரர்களாக ஃபில் சால்ட், விராட் கோலி இறங்கினர். இதில் ஃபில் சால்ட் 62 ரன்களும், கோலி 43 ரன்களும் விளாசினர். மயங்க் அகர்வால் 11, பட்டிதார் 18 ரன்களுடன் வெளியேறினர். இதன்பிறகு அடுத்தடுத்த விக்கெட்கள் சரியத் தொடங்கின. பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களும், இஷான் மலிங்கா 2 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினர்.

இதன்படி 19.5 ஓவர்களில் ஆல் அவுட் என்ற நிலையில் ஆர்சிபியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். நேற்றைய தினம் (மே 22) ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற குஜராத் அணியை ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறிய லக்னோ அணி வீழ்த்தியது. அதே போல இன்றும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஆர்சிபி-யை ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in