Last Updated : 31 Jul, 2018 09:25 AM

 

Published : 31 Jul 2018 09:25 AM
Last Updated : 31 Jul 2018 09:25 AM

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரணாய், சமீர் வர்மா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்- கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடிகள் அசத்தல்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், சமீர் வர்மா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

சீனாவில் நான்ஜிங் நகரில் நடை பெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள இந்தியா வின் ஹெச்.எஸ்.பிரணாய், 109-ம் நிலை வீரரான நியூஸிலாந்தின் அபிநவ் மேனோடாவை எதிர்த்து விளையாடினார். 28 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரணாய் 21-12, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 19-ம் நிலை வீரரான இந்தியாவின் சமீர் வர்மா 21-13, 21-10 என்ற நேர் செட்டில் 41-ம் நிலை வீரரான பிரான்ஸின் லூக் காஸ் கோர்வீயை எளிதாக வீழ்த்தி னார். இந்த ஆட்டம் 39 நிமிடங்கள் நடைபெற்றது. ஆடவர் இரட்டை யர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21-13, 21-18 என்ற நேர் செட்டில் பல்கேரியாவின் டேனியல் நிக்கோலோவ், இவான் ருசெவ் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றில் கால்பதித்தது.

முதல் நிலை வீரரான டென்மார்க் கின் விக்டர் ஆக்செல்சன் 21-8, 21-7 என்ற நேர் செட்டில் 130-ம் நிலை வீரரான போர்ச்சுக்கலின் நுனோ அஞ்ஜோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் 6-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள 9-ம் நிலை வீரரான சீனாவின் லின் டான் தனது முதல் சுற்றில் 21-14, 21-14 என்ற நேர் செட்டில் நெதர்லாந்தின் மார்க் கல்ஜோவை வீழ்த்தினார்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட் விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, அஸ் வினி பொன்னப்பா ஜோடி 21-9, 22-20 என்ற நேர் செட்டில் டென்மார்க் கின் நிக்லஸ் நார், சாரா தைசென் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத் தில் பிரணவ் ஜெர்ரி ஜோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடி 21-17, 21-15 என்ற நேர் செட்டில் செக் குடியரசின் ஜேக்கப் பிட்மான், அல் பீட்டா பசோவா ஜோடியை தோற் கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந் தது. இதேபோல் மேலும் இரு இந்திய ஜோடிகளும் 2-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தின.

இந்தியாவின் சவுரப் சர்மா, அனுஷ்கா பாரிக் ஜோடி 21-13, 21-12 என்ற நேர் செட்டில் நைஜீரியாவின் என்ஜோ அபாஹ், பீஸ் ஓர்ஜி ஜோடியை வீழ்த்தியது. இதேபோல் இந்தியாவின் ரோகன் கபூர், குஹூ கார்க் ஜோடி 21-19, 21-6 என்ற நேர் செட் டில் கனடாவின் டோபி, ரச்சல் ஹான் டெரிச் ஜோடியை தோற்கடித்தது.

அதேவேளையில் மகளிர் இரட் டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியா வின் சன்யோகிதா, பிரஜக்தா சவாந்த் ஜோடி 20-22, 14-21 என்ற நேர் செட்டில் துருக்கியின் பெங்குயிசு, நாஸ்லிகன் ஜோடி யிடம் வீழ்ந்தது. இந்த ஆட்டம் 34 நிமிடங்கள் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x