Published : 12 May 2025 06:48 PM
Last Updated : 12 May 2025 06:48 PM
மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் இந்திய வீரர் விராட் கோலி. இந்நிலையில், அவருக்கு மாற்றாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாட உள்ள வீரர் யார் என்பதை பார்ப்போம்.
மொத்தம் 210 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடி உள்ளார் கோலி. அதில் 160 இன்னிங்ஸில் பேட்டிங் ஆர்டரில் நான்காவது பேட்ஸ்மேனாக விளையாடி உள்ளார். அந்த இடத்தில் மட்டும் 7,564 ரன்களை கோலி எடுத்துள்ளார். ஆதலால் கோலி விட்டு செல்லும் இந்த இடத்தை நிரப்பும் வீரருக்கு பெரிய அளவில் அழுத்தம் இருக்கும். அதை சமாளிக்கும் திறனும் அந்த வீரருக்கு அவசியம்.
கே.எல்.ராகுல்: அணியின் தேவைக்கு ஏற்ப பேட்டிங் ஆர்டரில் மாறி மாறி ஆடி வருபவர் கே.எல்.ராகுல். டாப் ஆர்டர் முதல் லோயர் மிடில் ஆர்டர் வரை அணியின் தேவைக்கு ஏற்ப ஆடக் கூடியவர். அந்த வகையில் ‘நம்பர் 4’ பேட்ஸ்மேனாக ராகுல் கச்சிதமாக பொருந்தி விடுவார்.
சர்பராஸ் கான்: இந்திய டெஸ்ட் அணியில் ‘நம்பர் 4’ பேட்ஸ்மேனுக்கான ரேஸில் முந்தும் வீரர்களில் 27 வயதான சர்பராஸ் கானும் ஒருவர். கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் சதம் விளாசினார். ஆஸ்திரேலிய தொடரில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் ‘நம்பர் 4’ இடத்தில் ஆட சர்பராஸும் சரியான சாய்ஸாக இருப்பார்.
சாய் சுதர்ஷன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகாத சாய் சுதர்ஷனும் 4-வது இடத்துக்கான ரேஸில் உள்ளார். தமிழகத்தை சேர்ந்த அவர், சிறந்த ஃபார்மில் உள்ளார். கவுன்ட்டி கிரிக்கெட் அனுபவமும் அவருக்கு உள்ளது. அதனால், இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் சாய் சுதர்ஷன் இடம்பெற வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT