Published : 28 Apr 2025 08:08 AM
Last Updated : 28 Apr 2025 08:08 AM
புதுடெல்லி: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார்.
அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாட்ரிட் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் பங்கேற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும், ஜோகோவிச்சும் மோதினர்.
இதில் அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலும் ஜோகோவிச் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT