Last Updated : 25 Jul, 2018 08:10 AM

 

Published : 25 Jul 2018 08:10 AM
Last Updated : 25 Jul 2018 08:10 AM

விக்கெட் கீப்பிங் பணியில் தோனியின் ஆலோசனை பெரிதும் உதவியது: மனம் திறக்கிறார் இளம் வீரர் ரிஷப் பந்த்

ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய ஏ அணியில் இடம் பெற்றிருந்த ரிஷப் பந்த், சிறந்த திறனை வெளிப் படுத்தியதன் காரணமாகவே தேசிய அணிக்கும் அழைக்கப்பட்டுள்ளார். எனினும் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக்கும் அணியில் இருப்பதால் விளையாடும் லெவ னில் ரிஷப் பந்துக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்குமா என்பது சற்று சந்தேகம் தான்.

இந்நிலையில் பிசிசிஐ இணைய தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ரிஷப் பந்த் கூறியிருப்பதாவது:

எப்போதெல்லாம் தோனி யிடம் இருந்து எனக்கு ஆதரவு தேவைப்படுகிறதோ அப்போதெல் லாம் கேட்பேன், அவர் கூறுவதை நான் பயன்படுத்திக் கொள்வேன். எனது ஐபிஎல் ஒப்பந்தம் முதல் விக்கெட் கீப்பிங் பணி வரை எல்லாவற்றிலும் எனக்கு தோனி ஆலோசனைகள் வழங்கி உள்ளார். எப்போதும் அவர் என்னிடம் கூறுவது இதுதான், விக்கெட் கீப்பிங் பணியில் கைகளும், தலையும் ஒருங்கிணைந்து செயல் படுவது அவசியம் என்பார். உடலின் சமநிலையை பின்னர் சரிசெய்துகொள்ளலாம் என்று கூறுவார். அவரது இந்த ஆலோ சனை எனக்கு அதிக அளவில் உதவியது.

ஒவ்வொரு முறையும் நான் இந்திய அணியின் ஒய்வறைக்கு வரும்போது, எப்போதும் என் னுடன் ஒரு விஷயம் நிற்கிறது. அது ஓய்வறையில் நிலவும் நேர் மறைதான். ஒவ்வொருவரும் மற்ற வர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இந்திய அணியின் ஓய்வறையில் இது மிகவும் முக்கியமான காரணி யாக உள்ளது.

ஐபிஎல் தொடரில் இருந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி, தற்போது இங்கிலாந்தில் 4 நாட்கள் ஆட்டம் என அடுத்தடுத்த வடிவத்துக்கு அதிக வேறுபாடுகள் இல்லை என்றே கருதுகிறேன். ஆனால் ஷாட்களை தேர்வு செய்வதில் அதிகம் செய்ய வேண்டியது உள்ளது. சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் உங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பீல்டிங் அமைப்பை பார்க்கலாம்.

நீங்கள் நேரம் எடுத்துக்கொள்ள லாம். ஏனெனில் நீங்கள் 5 நாட்கள் விளையாட போகிறீர்கள். அதேசம யம் குறுகிய வடிவிலான கிரிக் கெட்டில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் சேர்க்க வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு இதுவரை மகிழ்ச்சியான முறையி லேயே தயாராகி உள்ளேன். டியூக் பந்துகள் இங்கிலாந்தில் அதிகம் ஸ்விங் ஆகின்றன. இந்திய ஏ அணிக்காக இங்கு விளையாடும் போது இதை நான் உணர்ந் தேன்.

பயிற்சியாளர் ராகுல் திராவிட் என்னிடம் கூறிய விஷயம் இது தான், எல்லாவற்றிலும் பொறுமை யாக இருக்க வேண்டும். இதை களத்திலும், களத்துக்கு வெளியே வும் கடைபிடிக்க வேண்டும் என்பார்.

நான் ஒரு நேர்மறையான பேட்ஸ்மேன் என்பதால் டெஸ்ட் கிரிக்கெட் என்று வரும்போது கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் சூழ் நிலைக்கு தகுந்தபடியும் விளையாட வேண்டும். விளையாட்டின் வேகத்தைப் பார்த்தும் அதற்கு தகுந்தபடி ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆடம் கில்கிறிஸ்ட் தான் எனது முன்மாதிரி. எனது இளம் பருவத்தில் அவரது அனைத்து ஆட்டங்களையும் பார்த்துள்ளேன்.

ஆனால் தற்போதைய தருணத்தில் என்னை சுற்றியுள்ள ராகுல் திராவிட், அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி போன்றவர்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் எனது ஆட்டத்தில் முன்னேற்றம் காண முயற்சி செய்து வருகிறேன்.

குறுகிய வடிவிலான தொடருக்கு தேர்வாகாததால் வருத்தம் ஒன்றும் இல்லை. இந்திய டெஸ்ட் அணியின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்றே எப்போதும் விரும்புவேன். அந்த கனவு தற்போது நனவாகி உள்ளது. டெஸ்ட் அணிக்கு தேர்வானது அற்புதமான உணர்வாக இருந்தது. இது எனக்கு மட்டும் அல்ல எனது குடும்பத்தினருக்கும் மற்றும் எனது பயிற்சியாளர் தாரேக் சின்காவுக்கும்தான்.

தாரேக் சின்காதான் டெஸ்ட் கிரிக்கெட்டை எனது வாழ்க்கையின் தொடக்கத்திலேயே புரிந்துகொள்ள உதவினார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் நான் விளையாட வேண்டும் என அவர், எப்போதுமே விரும்பினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு நான் தேர்வானதும் தாரேக் சின்கா அதிகம் மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தார். அந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்தேன்.

இவ்வாறு ரிஷப் பந்த் கூறி னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x