கல்லூரிகள் டி20 கிரிக்கெட்டில் லயோலா அணி சாம்பியன்

கல்லூரிகள் டி20 கிரிக்கெட்டில் லயோலா அணி சாம்பியன்
Updated on
1 min read

சென்னை: சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரி களுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 420 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று ஆர்எம்கே பொறியியல் கல்லூரி - லயோலா கல்லூரி அணிகள் மோதின.

இதில் முதலில் பேட் செய்த லயோலா அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வீர விஷ்வா 66 ரன்கள் சேர்த்தார். ஆர்எம்கே அணி தரப்பில் யோக பாரதி 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

158 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்எம்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கேஷவர்தன் 33, திவாகர் 23, விக்னேஷ்வரன் 23 ரன்கள் சேர்த்தனர். லயோலா அணி சார்பில் ரோகன் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.

34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லயோலா கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு வெற்றி கோப்பையை ஆர்எம்கே கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர், பழனிச் சாமி, கே.மணிவண்ணன், கல்லூரி முதல்வர்கள் கே.ஏ முகமது ஜூனைத், என்.அன்புச் செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in