ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறை… - புதிய சாதனை படைத்த தோனி!

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறை… - புதிய சாதனை படைத்த தோனி!

Published on

ஐபிஎல் வரலாற்றில் 150 கேட்சுகளைப் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 22-வது லீக் ஆட்டம் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

இந்த போட்டியின் 8வது ஓவரில் விக்கெட் கீப்பர் தோனி, நேஹல் வதேரா அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். இத்துடன் ஐபிஎல் வரலாற்றில் 150 கேட்சுகளைப் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். தோனிக்கு அடுத்த இடத்தில் 137 கேட்சுகளுடன் தினேஷ் கார்த்திக் உள்ளார்.

விருத்தமான் சாஹா 87 கேட்சுகள், ரிஷப் பந்த் 76 கேட்சுகள், குயின்டன் டி காக் 66 கேட்சுகள் பிடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இன்றைய போட்டியை பொறுத்தவரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓப்பனிங்க் பேட்ஸ்மேனான் பிரியன்ஷ் ஆர்யா தனது முதல் செஞ்சுரியை பதிவு செய்துள்ளார். அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்து சொதப்பினாலும் கடைசியாக இறங்கிய ஷஷாங்க் சிங் 52, மார்கோ ஜென்சென் 34 ரன்கள் எடுத்து அசத்தினர். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது. கலீல் அஹமது, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகள், முகேஷ் சவுத்ரி, நூர் அஹமது தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in