Published : 08 Apr 2025 06:40 AM
Last Updated : 08 Apr 2025 06:40 AM

‘இலக்கை துரத்தும்’ பயத்தில் இருந்து மீளுமா சிஎஸ்கே? - பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.

5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்​ரிக் தோல்​வியை சந்​தித்​துள்​ளது. இந்த சீசனை மும்பை அணிக்கு எதி​ராக வெற்​றி​யுடன் தொடங்​கிய சிஎஸ்கே அதன் பின்​னர் நடை​பெற்ற 3 ஆட்​டங்​களி​லும் தோல்​வியடைந்​தது. இந்த 3 ஆட்​டங்​களி​லுமே அந்த அணி இலக்கை துரத்தி வீழ்ந்​துள்​ளது. தோல்வி அடைந்த 3 ஆட்​டங்​களில் இரண்டை சிஎஸ்​கே, சேப்​பாக்​கம் மைதானத்​தில் விளை​யாடி​யிருந்​தது.

180 ரன்​களுக்கு மேல் இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டாலே சிஎஸ்கே அணி அதை எட்​டிப்​பிடிப்​பது என்​பது எட்​டாக்​க​னி​யாக மாறி உள்​ளது. பெங்​களூரு அணிக்கு எதி​ராக197 ரன்​கள், ராஜஸ்​தான்அணிக்கு எதி​ராக 183 ரன்​கள், டெல்லி அணிக்கு எதி​ராக 184 ரன்​கள் இலக்கை விரட்ட முடி​யாமல் தவித்​தது சிஎஸ்கே அணி. இதில் ராஜஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்டத்தை தவிர்த்து மற்ற 2 ஆட்​டங்​களி​லும் இலக்கை துரத்​தும் போது சிஎஸ்​கே​விடம் இருந்து எந்​த​வித போராட்ட குண​மும் வெளிப்​படாதது கடும் விமர்​சனங்​களுக்கு வழி​வகுத்​துள்​ளது.

வெற்​றிக்​கான அணிச் சேர்க்​கையை கண்​டறிவதே சிஎஸ்​கேவுக்கு பெரிய இலக்காக மாறி உள்​ளது. ராகுல் திரி​பா​தி, தீபக் ஹூடா, ஜேமி ஓவர்​டன், சேம் கரண் ஆகியோரை நீக்​கி​விட்டு டேவன் கான்​வே, முகேஷ் சவுத்​ரி, விஜய் சங்​கர் ஆகியோரை பயன்​படுத்​திய போதி​லும் சிஎஸ்கே அணி​யால் வெற்​றிப் பாதைக்கு திரும்ப முடிய​வில்​லை. கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட், ஷிவம் துபே ஆகியோரது நிலை​யற்ற பேட்​டிங்​கும் கவலை​யளிக்​கும் வகை​யில் உள்​ளது.
பேட்​டிங்​கில் பவர்​பிளே​வில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்​ளாதது, பந்து வீச்​சில் பவர்​பிளே​வில் எதிரணியை கட்​டுப்​படுத்த முடி​யாதது ஆகியவை ஆட்​டத்​துக்கு ஆட்​டம் பலவீன​மாகி வரு​கிறது. மேலும் கேப்​டன் ருது​ராஜ் களவியூ​கங்​களை அமைப்​ப​தி​லும் தடு​மாற்​றம் அடைவது அணி​யின் பலவீனத்தை அதி​கரிக்​கச் செய்​துள்​ளது.

சுழற்​பந்து வீச்​சாளர்​களை எந்த இடங்​களில் பயன்​படுத்த வேண்​டும் என்​ப​தில் அவர், குழப்​பம் அடைந்​துள்​ள​தாக தெரி​கிறது. இது ஒரு​புறம் இருக்க சுழற்​பந்து வீச்​சில் நூர் அகமது மட்​டுமே நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வ​ராக உள்​ளார். சீனியர் வீரர்​களான ரவீந்​திர ஜடேஜா, ரவிச்​சந்​திரன் அஸ்​வின் ஆகியோரிடம் இருந்து எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறன் இது​வரை வெளிப்​பட​வில்​லை.

வேகப்​பந்து வீச்சை பொறுத்​தவரை​யில் கலீல் அகமது தொடக்க ஓவர்​களில் சிறப்​பாக செயல்​படு​கிறார். ஆனால் அவருக்கு உறு​துணை​யாக வீசுவதற்கு வலு​வான வேகப்​பந்து வீச்​சாளர் இல்​லை. மதீஷா பதிரனா நடுஓ​வர்​களி​லும், இறு​திக்​கட்ட ஓவர்​களி​லும் சிறப்​பாக செயல்​பட்​டாலும் அதற்​கான பலன் இல்​லாமல் உள்​ளது. பேட்​டிங், பந்து வீச்சு பலவீனங்​கள் இருக்​கும் வேளை​யில் சிஎஸ்​கே​வின் பீல்​டிங் திறனும் மங்​கத் தொடங்​கி​யுள்​ளது. நடப்பு சீசனில் 4 ஆட்​டங்​களில் அந்த அணி 7 கேட்ச்​களை தவற​விட்​டுள்​ளது. மற்ற எந்த அணி​களும் இவ்​வளவு அதி​க​மான கேட்ச்​களை கோட்​டை​விட​வில்​லை.

பேட்​டிங்​கில் கடந்த சீசனில் காயத்​துடன் விளை​யாடிய தோனி கடைசி 2 ஓவர்​களில் மட்​டும் களமிறங்​கிய தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு பலம் சேர்த்​தார். ஆனால் 43 வயதாகும் அவர், இந்த சீசனில் ராஜஸ்​தான், டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அதிக பந்​துகளை எதிர்​கொண்ட போதி​லும் வெற்​றிக்​கான பங்​களிப்பை வழங்​க​வில்​லை. டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தோனி 11-வது ஓவரில் களமிறங்​கி​னார். அப்​போது அணி​யின் வெற்​றிக்கு 56 பந்​துகளில் 110 ரன்​கள் தேவை​யாக இருந்​தது.

நவீன​கால தொழிற்​முறை டி 20 போட்​டிகளில் இந்த ரன்​கள் சேர்க்​கக்​கூடியது​தான். ஆனால் தோனி​யும், விஜய் சங்​கரும் விளை​யாடிய விதம் வெற்​றிக்​கான வேட்கை இல்​லாதது போன்றே இருந்​தது.

சிஎஸ்கே அணி வெற்​றிப் பாதைக்கு திரும்ப வேண்​டு​மா​னால் அணி​யின் அடிப்​படை தேவை​கள் அனைத்​தை​யும் நிறைவு செய்ய வேண்​டும். மேலும் தோனியை கடந்து சிந்​திக்க வேண்​டிய கட்​டத்​துக்​கும் சிஎஸ்கே தள்​ளப்​பட்​டுள்​ளது.

தற்​போது சிஎஸ்கே 4 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்​றி, 3 தோல்​வி​யுடன் 2 புள்​ளி​கள் பெற்று புள்​ளி​கள் பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. இன்​னும் 10 ஆட்​டங்​களே மீதம் உள்​ளன. இங்​கிருந்து பாய்ச்​சல் எடுக்க வேண்​டுமென்​றால் சிஎஸ்கே புத்​துணர்ச்​சி​யுட​னும், கூடு​தல் உத்​வேகத்​துட​னும் செயல்பட வேண்​டும். இன்​றைய ஆட்​டத்​தில் அநேக​மாக கமலேஷ் நாகர்​கோட்​டி, அன்​ஷுல் கம்​போஜ், ஸ்யேரஷ் கோபால் ஆகியோரில் யாரேனும் ஒரு​வருக்கு வாய்ப்பு கிடைக்​கக்​கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்​சி​யாக 2 வெற்​றிகளை பெற்ற நிலை​யில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு எதி​ராக சொந்த மண்​ணில் தோல்​வியை எதிர்​கொண்​டது. 3 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி ஒரு தோல்​வி, 2 வெற்​றிகளு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. ராஜஸ்​தான் அணிக்கு எதி​ராக 206 ரன்​கள் இலக்கை துரத்​திய பஞ்​சாப் அணி​யின் டாப் ஆர்​டர் சரிவை சந்​தித்​திருந்​தது.

முதல் இரு ஆட்​டங்​களி​லும் 13 சிக்​ஸர்​களை விளாசிய ஸ்ரேயஸ் ஐயர் 10 ரன்​களில் நடையை கட்​டி​யிருந்​தார். இதே​போன்று பிரியன்ஷு ஆர்​யா, பிரப்​சிம்​ரன் சிங், மார்​கஸ் ஸ்டாய்​னிஸ் ஆகியோ​ரும் விரை​விலேயே வெளி​யேறி​யிருந்​தனர். நேஹல் வதேரோ 41 பந்​துகளில் 62 ரன்​கள் விளாசிய போதும் அது வெற்​றிக்கு போது​மான​தாக அமைய​வில்​லை. இன்​றைய ஆட்​டத்​தில் ஸ்ரேயஸ் ஐயர் மீண்​டும் மட்​டையை சுழற்​று​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் மார்கோ யான்​சன், அர்​ஷ்தீப் சிங், லாக்கி பெர்​குசன் ஆகியோர் சிஎஸ்கே பேட்​டிங் வரிசைக்கு நெருக்​கடி தரக்​கூடும்​. சுழலில்​ யுவேந்​திர சாஹல்​, கிளென்​ மேக்​ஸ்​ வெல்​ நம்​பிக்​கை அளிக்​கக்​கூடும்​.

தோனியும்.. சாஹலும்: சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் லெக் ஸ்பின்னரான யுவேந்திர சாஹல் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். தோனிக்கு எதிராக யுவேந்திர சாஹல் இதுவரை ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளில் 10 ஆட்டங்களில் நேருக்குநேர் விளையாடி உள்ளார். இதில் 5 முறை தோனியை, யுவேந்திர சாஹல் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

‘அஸ்வின் ட்விஸ்ட்’- சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் அவர், கிரிக்கெட் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை கூறுவது வழக்கம். சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் உள்ளிட்டவை குறித்தும் வீரர்கள்,அணிகளின் பலம், பலவீனங்கள் குறித்தும் கூறுவது உண்டு. இந்நிலையில் அவரது சேனலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பங்கேற்ற விருந்தினர்கள் சிலர், சிஎஸ்கே அணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் அஸ்வின் தனது சேனலில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், இனிமேல் சிஎஸ்கே அணி தொடர்பான போட்டிக்கு முந்தைய கண்ணோட்டமும், பிந்தைய பகுப்பாய்வும் இடம் பெறாது என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x