Published : 05 Apr 2025 09:03 AM
Last Updated : 05 Apr 2025 09:03 AM
டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்டன் அக்சர், தோனியுடன் இருக்கும் புகைப்படங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அக்சர் படேல் கூறும்போது, “துபாயில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு ஆலோசகராக இருந்தார் தோனி.
அப்போது எனது மனநிலை பற்றி அவரிடம் பேசினேன். அந்த உரையாடல்களின் தாக்கத்தைத்தான் இப்போது என்னுடைய செயல்திறனில் பார்க்கிறீர்கள். அதற்குப் பிறகு என்ன சாதிச்சிருக்கேனோ, அதற்கான பெருமை தோனியையே சேரும்” என்றார்.
31 வயதான அக்சர் படேல், இந்திய கிரிக்கெட் அணிக்காக 14 டெஸ்ட், 68 ஒருநாள், 71 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். சாம்பியன் டிராபி 2025 தொடரில் இந்திய அணிக்காக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். 152 ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். இதுவரை ஐபிஎல் அரங்கில் 1675 ரன்கள், 123 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT