

அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக் கெதிரான ஐபிஎல் லீக் ஆட் டத்தில் நாங்கள் பல இடங் களில் தவறுகளைச் செய்தோம். அதுவே எங்களது தோல்விக்கு வழிவகுத்துவிட்டது என்று மும்பை இந்தியன்ஸ் அணி யின் கேப்டன் ஹர்திக் பாண் டியா தெரிவித்தார்.
அகமதாபாத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன் கள் எடுத்தது.
சாய் சுதர்ஷன் 63, ஷுப்மன் கில் 38, ஜாஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. 4 ஓவர் கள் பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா ஆட் டநாயகன் விருதைப் பெற்றார். தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது:
இந்த ஆட்டத்தில் நாங் கள் ஒரு தொழில்முறை கிரிக் கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை. பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டதால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக குஜ ராத் அணியை எடுக்க விட்டு விட்டோம். குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் ஷூப்மன் கில், சாய் சுதர்ஷன் ஆகியோர் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.
நாங்கள் இந்த ஆட்டத்தில் பல தவறுகளைச் செய்துவிட் டோம். அதைப் பட்டியலிடுவது கடினம். இதுவே எங்களது தோல்விக்குக் காரணம். தற்போது ஐபிஎல் தொடர் ஆரம்ப கட்டத்தில்தான் இருக் கிறது. அதே சமயம், எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் வரும் போட்டிகளில் அதிக ரன் களை குவிக்க வேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்தார்.