டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர்: தகுதி சுற்றில் தமிழக வீரர் அபினந்த் வெற்றி

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர்: தகுதி சுற்றில் தமிழக வீரர் அபினந்த் வெற்றி
Updated on
1 min read

சென்னை: டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தகுதி சுற்றுடன் தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் உலகின் சிறந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 600 புள்ளிகள் வழங்கப்படும் இந்த தொடரின் மொத்த பரிசு தொகை ரூ.2.35 கோடியாகும்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் தமிழகத்தின் முதல் நிலை வீரரான அபினந்துக்கு முதல் ஆட்டத்தில் ‘பை' வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அவர், தனது 2-வது ஆட்டத்தில் சகநாட்டைச் சேர்ந்த பங்கஜ் குமாருடன் மோதினார். 13 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபினந்த் 3-0 ( 3, 11-1, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த 14ம் நிலை வீராங்கனையான அம்ருதா புஷ்பக் 3-1 என்ற கணக்கில் அனன்யா முரளிதரனை தோற்கடித்தார். அம்ருதா தனது அடுத்த ஆட்டத்தில் சகநாட்டைச் சேர்ந்த சிண்ட்ரெலா தாஸுடன் மோதுகிறார்.

மற்ற ஆட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மேகன் செந்தில், கார்த்திகேயன் ஆகியோர் 5 செட் 11-கள் வரை போராடி தோல்வி அடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in