‘சேப்பாக்கத்தில் அனிருத் இசை’ - IPL 2025

‘சேப்பாக்கத்தில் அனிருத் இசை’ - IPL 2025
Updated on
1 min read

ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், விசாகப்பட்டினம், முலான்பூர், குவாஹாட்டி, லக்னோ, மும்பை, டெல்லி, தரம்சாலா, அகமதாபாத் ஆகிய 13 நகரங்களில் நடைபெறுகிறது.

முதல் போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. அதேவேளையில் மற்ற 12 மைதானங்களில் நடைபெறும் முதல் போட்டியின் போது தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாலை 6.30 மணி முதல் 6.50 மணி வரை தொடக்க விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in