Published : 12 Mar 2025 12:20 AM
Last Updated : 12 Mar 2025 12:20 AM

150-வது வருட கொண்டாட்டம்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்டில் மோதல்

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதன்முறையாக கடந்த 1887-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 150-வது வருட கொண்டாட்டத்தையொட்டி பகலிரவு டெஸ்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2027-ம் ஆண்டு மார்ச் 11 முதல் 15-ம் தேதி வரை மெல்பர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பிங்க் பந்து போட்டியில் விளையாடும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் பிரனாய் தோல்வி

ஆல் இங்​கிலாந்து சாம்​பியன்​ஷிப் பாட்​மிண்​டன் தொடர் பர்​மிங்​காமில் நேற்று தொடங்​கியது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 29-ம் நிலை வீர​ரான இந்​தி​யா​வின் ஹெச்​.எஸ்​.பிர​னாய், 17-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் தோமா ஜூனியர் போப்​போவுடன் மோதி​னார். 53 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் பிர​னாய் 19-21,16-21 என்ற நேர் செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x