ஆக்ரோஷமான பவுன்சரில் ஸ்டூவர்ட் பிராட் மூக்கைப் பெயர்த்தார் வருண் ஆரோன்

ஆக்ரோஷமான பவுன்சரில் ஸ்டூவர்ட் பிராட் மூக்கைப் பெயர்த்தார் வருண் ஆரோன்
Updated on
1 min read

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று இங்கிலாந்து வலுவான நிலைக்கு முன்னேறியுள்ளது. ஆனால் அந்த அணியின் முக்கிய பவுலர் ஸ்டூவர்ட் பிராட் மூக்கை ஆக்ரோஷமான பவுன்சர் மூலம் பெயர்த்தார் வருண் ஆரோன்.

உணவு இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில் 98வது ஓவரி வீச வந்த வருண் ஆரோன், பிராடிற்கு தொடர்ந்து அதிவேக பவுன்சர்களை வீசிவந்தார்.

அதில் இரண்டு பந்துகளை சிக்சருக்குத் தூக்கினார் பிராட். அடுத்த பந்து மணிக்கு சுமார் 142 கிமீ வேகத்தில் எகிறி வந்தது. புல் ஆட முயன்று கூடுதல் வேகம் காரணமாக பீட் ஆனார் பிராட்.

பந்து ஹெல்மெட் கிரில்லிற்கும் மேல் முனைக்கும் உள்ள இடைவெளியில் உள்ளே புகுந்து மூக்கின் மையத்தைத் தாக்கியது. ரத்தம் கொட்டியது. மேலும் ஆட முடியாமல் 12 ரன்னில் பெவிலியன் திரும்பினார் பிராட்.

2வது இன்னிங்சில் அவரால் பந்து வீச முடியுமா என்பது சந்தேகமாகியுள்ளது.

முன்னதாக பங்கஜ் சிங், ஜோ ரூட்டையும், ஜோஸ் பட்லரையம் வீழ்த்தி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆண்டர்சன் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்ற இங்கிலாந்து 367 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளுடன் முடிந்தது. பிராட் பேட் செய்ய முடியாது பெவிலியன் திரும்பியதால் இங்கிலாந்து தற்போது பந்து வீசக் களமிறங்க வேண்டும்.

இந்தியாவைக் காட்டிலும் இங்கிலாந்து 215 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in