20.6 கோடி பார்வைகளுடன் சாதனை படைத்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி | சாம்பியன்ஸ் டிராபி

20.6 கோடி பார்வைகளுடன் சாதனை படைத்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி | சாம்பியன்ஸ் டிராபி
Updated on
1 min read

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி கடந்த பிப்.23 அன்று இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியை 20.6 கோடி தொலைக்காட்சி பார்வையாளர்கள் கண்டுள்ளனர்.

உலகக் கோப்பையைத் தவிர, இது ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) வரலாற்றில் 2-வது அதிகம் பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டி என்று பெருமையை பெற்றுள்ளது. 2023 உலகக் கோப்பையில் நடந்த போட்டியை விட இது 10% அதிகமான ரேட்டிங் பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டி 2609 கோடி நிமிட தொலைக்காட்சி பார்வை நேரத்தையும் எட்டி சாதனை படைத்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்வி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பாகிஸ்தானின் நம்பிக்கையை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்தது. அரையிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கையைப் பெற, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியையே பாகிஸ்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது.

நியூசிலாந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தியவுடன், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி எட்டு அணிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து வெளியேறியது. ராவல்பிண்டியில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான கடைசி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in