

இங்கிலாந்திடம் இந்தியா 1-3 என்று டெஸ்ட் தொடரை இழந்ததையடுத்து எதிர்மறையாக சில சுவையான புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளது.
இதற்கு முன்பாக 1974ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்திடம் 42 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போது 17 ஓவர்களைச் சந்தித்தது. நேற்று ஓவலில் இந்தியா 29.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 6 முறை இதுபோன்று மிகக்குறைந்த ஓவர்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.
விராட் கோலியின் விசித்திர சாதனை:
5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 இன்னிங்ஸ்களை விளையாடிய டாப் பேட்ஸ்மென்கள் என்ற வகையில் விராட் கோலி நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 134 ரன்களை எடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2ஆம் இடம் பிடித்துள்ளது.
முதலிடமும் இந்தியருக்கே. 1947-48 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் சந்து சர்வடே ஒரே தொடரில் 10 இன்னிங்ஸ்களில் வெறும் 100 ரன்களையே எடுத்திருந்தார். கோலி தற்போது 2ஆம் இடத்தில் உள்ளார். அடுத்த சச்சின் என்று வர்ணிக்கப்பட்ட நமது மீடியாக்களின் நாயக உருவாக்க மனப்போக்கிற்கு எதிரான புள்ளி விவரமாகும் இது.
பி.எச். பஞ்சாபி என்ற மற்றொரு இந்திய வீரர், அதிகம் அறியப்படாத இவர் கூட பாகிஸ்தானுக்கு எதிராக 1954/55 தொடரில் 5 டெஸ்ட், 10 இன்னிங்ஸ் தொடரில் 164 ரன்களை எடுத்துள்ளார்.
மேலும் விசித்திரமானது தவான், கோலி ஆகியோரது தனிப்பட்ட ரன் எண்ணிக்கையை விட எக்ஸ்ட்ராஸ் அதிகம். இந்தியாவுக்கு 177 ரன்கள் இந்தத் தொடரில் எக்ஸ்ட்ராஸ் வகையில் கிடைத்துள்ளது.
புஜாராவின் இந்த டெஸ்ட் தொடர் சராசரி 22.2. இந்திய அணியில் 3ஆம் நிலையில் களமிறங்கிய ஒரு வீரர் குறைந்தது 5 இன்னிங்ஸ்களில், இங்கிலாந்தில் எடுக்கும் ஆகக் குறைந்த சராசரியாகும் இது.