‘அவர் ஒரு கோமாளி’ - பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளரை விமர்சித்த கில்லஸ்பி

‘அவர் ஒரு கோமாளி’ - பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளரை விமர்சித்த கில்லஸ்பி
Updated on
1 min read

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளரான அகிஃப் ஜாவேதை ‘கோமாளி’ என விமர்சித்துள்ளார் ஜேசன் கில்லஸ்பி. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே ஜேசன் கில்லஸ்பி மற்றும் கேரி கிர்ஸ்டன் விலகியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இடைக்கால பயிற்சியாளரை கில்லஸ்பி விமர்சித்துள்ளார்.

‘கடந்த இரண்டு ஆண்டுகளில் 16 பயிற்சியாளர்கள் மற்றும் 26 தேர்வு குழுவினரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றி உள்ளது. எந்தவொரு அணியும் இது மாதிரியான மாற்றத்தினை எதிர்கொண்டால் அதன் தாக்கமும், விளைவும் இப்படித்தான் எதிர்மறையாக இருக்கும். அணியில் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அப்போது தான் முன்னேற்றம் இருக்கும்’ என அகிஃப் ஜாவேத் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறிய பிறகு அவர் இதனை தெரிவித்தார்.

இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் கில்லஸ்பி: “இது வேடிக்கையானது. என்னையும் கேரியையும் குறைத்து மதிப்பிடுவதற்கான பணிகளை திரைக்கு பின் அவர் செய்தார். அவர் ஒரு கோமாளி” என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in