பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: இந்தியாவின் அர்விந்த் முன்னிலை

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: இந்தியாவின் அர்விந்த் முன்னிலை
Updated on
1 min read

செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, செக்குடியரசின் நுயென் தாய் டாய் வானை எதிர்த்து விளையாடினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 29-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்தத் தொடரில் அவருக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. முதல் இரு சுற்றுகளையும் பிரக்ஞானந்தா டிராவில் முடித்திருந்தார்.

மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்விந்த் சிதம்பரம், சீனாவின் வெய் யியை எதிர்கொண்டார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய அர்விந்த் சிதம்பரம் 44-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். 9 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 3 சுற்றுகளின் முடிவில் அர்விந்த் சிதம்பரம் 2.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் ஆகியோர் 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவின் சாம் ஷாங்க்லாந்து, வியட்நாமின் குவாங் லியிம் லி, செக்குடியரசின் டேவிட் நவரா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோர் தலா 1.5 புள்ளிகளை பெற்றுள்ளனர். செக்குடியரசின் நுயென் தாய் டாய் வான், துருக்கியின் குரேல் எடிஸ் ஆகியோர் தலா ஒரு புள்ளியுடன் 8-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். சீனாவின் வெய் யி 0.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in