Published : 28 Feb 2025 12:42 PM
Last Updated : 28 Feb 2025 12:42 PM

“நான் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்ட இம்ரான் தான் காரணம்” - சுனில் கவாஸ்கர் மனம் திறப்பு

டெஸ்ட் கிரிக்கெட் உலகில் முதன்முதலாக 10,000 ரன்களை எட்டிய லெஜண்ட் சுனில் கவாஸ்கர். அவர் தான் இந்த 10 ஆயிரம் ரன்களை எடுப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது இம்ரான் கான்தான் என்று கூறியுள்ளார்.

1987-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத்தில் இந்த உலக சாதனையை நிகழ்த்தினார் சுனில். அவருக்குப் பிறகு இன்று 14 வீரர்கள் இந்த மைல்கல்லைக் கடந்து சென்று விட்டனர். ஆனாலும் சுனில் கவாஸ்கர் முதன்முதலில் இதற்குப் பாதை வகுத்துக் கொடுத்த உத்வேகி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்நிலையில், டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஊடகத்தில் வாசிம் அக்ரம் இது குறித்து கவாஸ்கரிடம் கேள்வி எழுப்பினார். கவாஸ்கர் பதிலிறுக்கும் போது, “10,000 ரன்களை முதன்முதலில் டெஸ்ட் போட்டிகளில் எடுத்தது ஓர் அற்புதமான உணர்வு. நான் கிரிக்கெட்டைத் தொடங்கியபோது இதைச் சாதிப்பேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை.

நான் அப்படிப்பட்ட லட்சியவாதி அல்ல. நான் இந்த மைல்கல்லை எட்ட முடிந்தது என்றால் அதற்கு ஒரே காரண கர்த்தா இம்ரான் கான் தான். பாகிஸ்தான் இங்கு வருவதற்கு ஓராண்டுக்கு முன்பாக இங்கிலாந்தில் நானும் இம்ரானும் இத்தாலிய உணவு விடுதிக்குச் சென்றோம். அப்போது நான் இம்ரானிடம் கூறினேன், இந்தத் தொடர்தான் எனக்குக் கடைசி தொடர் ஓய்வு அறிவிக்கப் போகிறேன் என்றேன், இதைச் சொல்லும்போது 1986-ம் ஆண்டு. ஆனால், இம்ரான் இதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

இம்ரான் என்னிடம் ஏன் இந்த முடிவு என்றார். நான் இந்த முடிவுதான் சரி என்றேன். அதற்கு இம்ரான், ‘இல்லை, பாகிஸ்தான் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது, நான் இந்தியாவை இந்திய மண்ணில் நீங்கள் களத்தில் இருக்கும்போது வீழ்த்த வேண்டும்’ என்று என்னிடம் கூறினார். அதாவது கவாஸ்கர் இல்லாத இந்தியாவை வீழ்த்த விரும்பவில்லை என்று இம்ரான் கூறினார்.

அப்போது நான் கூறினேன், பாகிஸ்தான் இங்கு வரப்போவதில்லை என்று. ஆனால் இம்ரான், ஐசிசி மீட்டிங் அடுத்த வாரம் உள்ளது, அதில் அறிவிப்பு நிச்சயம் வரும் என்றார். நான் சொன்னேன், அறிவிப்பு வரட்டும் நான் ஆடுவேன், இல்லையெனில் இதுதான் என் கடைசி தொடர் என்றேன்.

ஆனால் இம்ரான் சொன்னது போலவே அறிவிப்பு வந்தது. அப்படி அறிவிப்பு வராமல் நான் அந்தத் தொடரில் ஓய்வு பெற்றிருந்தால் நான் 9.200-300 ரன்களில்தான் முடிந்திருப்பேன். அதனால்தான் 10 ஆயிரம் ரன்கள் மைல்கல்லை எட்ட முடிந்தது” என்றார் சுனில் கவாஸ்கர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x