Published : 02 Aug 2014 21:31 pm

Updated : 02 Aug 2014 21:33 pm

 

Published : 02 Aug 2014 09:31 PM
Last Updated : 02 Aug 2014 09:33 PM

ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று தமிழக ஜோடி ஜோஷனா-தீபிகா பல்லிக்கல் சாதனை

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தனர் தமிழக ஜோடி ஜோஷனா சின்னப்பா-தீபிகா பல்லிக்கல்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் வென்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தனர் ஜோஷனா சின்னப்பா-தீபிகா பல்லிக்கல் ஜோடி.

இங்கிலாந்து ஜோடியான ஜென்னி டன்கல்ஃப், லாரா மசாரோ ஜோடியை தமிழக ஜோடியான ஜோஷனா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் ஜோடி 11-6, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

காமன்வெல்த்தில் இந்தியா ஸ்குவாஷில் வெல்லும் முதல் பதக்கமாகும் இது, அதுவும் தங்கமாக வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா மொத்தம் 14 தங்கம், 25 வெள்ளி, 16 வெண்கலப்பதக்கங்களுடன் இந்தியா 5ஆம் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து மொத்தம் 145 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. 125 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 2வது இடம், 75 பதக்கங்களுடன் கனடா 3வது இடம், 49 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 4வது இடம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தீபிகா பல்லிக்கல்ஜோஷனா சின்னப்பா தங்கம் வென்றனர்ஸ்குவாஷ்காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2014

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author