38-வது தேசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் தங்கம் வென்றார் வேலவன் செந்தில் குமார்

38-வது தேசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் தங்கம் வென்றார் வேலவன் செந்தில் குமார்
Updated on
1 min read

டேராடூன்: 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான பளுதூக்குதலில் +109 கிலோ எடை பிரிவில் தமிழகத்தின் எஸ்.ருத்ராமயன் 355 கிலோ (ஸ்நாட்ச் 175 + கினீன் அன்ட் ஜெர்க் 355) எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் அவர், தேசிய சாதனையை படைத்தார்.

ஸ்குவாஷில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், மகாராஷ்டிராவை சேர்ந்த ராகுலை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

மற்றொரு தமிழக வீரரான அபய் சிங் வெண்கலப் பதக்கம் பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ராதிகா சீலன், பூஜா ஆர்த்தி ஆகியோர் வெண்லக் பதக்கம் கைப்பற்றினர்.

37 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் நேற்றைய நிலவரப்படி தமிழகம் 9 தங்கம், 12 வெற்றி, 13 வெண்கலம் என 34 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in