2-வது அதிவேக சதம்: அபிஷேக் சர்மா சாதனை

2-வது அதிவேக சதம்: அபிஷேக் சர்மா சாதனை
Updated on
1 min read

மும்பை: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2-வது அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபிஷேக் சர்மா.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். டி20 போட்டிகளில் இது 2-வது அதிவேக சதமாகும். அவர் 135 ரன்களில் அவுட்டானார். இந்த வரிசையில் இந்தியாவின் ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் 35 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in