Published : 02 Jul 2018 04:23 PM
Last Updated : 02 Jul 2018 04:23 PM

லிவர்பூல் ஒப்பந்தத்தை நீடித்த முகமத் சாலா

லிவர்பூல் உடனான தனது ஒப்பந்தத்தை அந்த அணியின் நட்சத்திர வீர்ர் முகமத் சாலா நீட்டித்துள்ளார்.

இதுகுறித்தான அறிவிப்பை லிவர்பூல் அணி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து லீவர்பூல் தரப்பில் லீவர்பூல்லுடனான நீடித்த ஒப்பந்தத்தில் முகமது சாலா கையெழுத்திட்டிருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் சாலாவின்  ஊதியம் குறித்த அறிவிப்பை லீவர்பூல் வெளியிடவில்லை.

எகிப்தைச் சேர்ந்த 25 வயதான முகமது சாலா, தொழில்முறை கால்பந்து போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார்.  பிரிமீயர் லீக் தொடரில் இந்த சீசனில் 36 ஆட்டங்களில் 32 கோல்கள் அடித்து மிரளச் செய்துள்ளார்.

இதற்கு முன்னர் ஆலன் ஷீரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் அடித்த 31 கோல்களே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தகர்த்துள்ள முகமது சாலா ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் 51 ஆட்டங்களில் லிவர்பூல் அணிக்காக 44 கோல்கள் அடித்துள்ளார். இவற்றுடன் தேசிய அணிக்காக முகமது சாலா 57 ஆட்டங்களில் 33 கோல்கள் அடித்து பலம் சேர்த்துள்ளார்.

பிரிமீயர் லீக் சீசனில் தனது அபார ஃபார்மால் இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருதை சாலா பெற்றுள்ளார். ஆப்பிரிக்க நாட்டில் இருந்து இந்த விருதை பெறும் 2-வது வீரர் சாலா.

இந்நிலையில் லிவர்பூல் உடனான தனது ஒப்பந்தத்தை அந்த அணியின் நட்சத்திர வீர்ர் முகமத் சாலா நீட்டித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x