தேசிய விளையாட்டு: தமிழக அணியில் 391 பேர்

தேசிய விளையாட்டு: தமிழக அணியில் 391 பேர்
Updated on
1 min read

சென்னை: உத்தரகாண்டில் வரும் ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரை நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 391 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கணேஷ், பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் 38-வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகளை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து வீரர்களுக்கான சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in