பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப்!

பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப்!

Published on

சென்னை: சென்னையின் எஃப்சி, நார்விச் சிட்டி எஃப்சியுடன் இணைந்து, தமிழ்நாட்டில் அடிமட்ட அளவில் கால்பந்தை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக சிஎஃப்சி-என்சிஎஃப்சி பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. இந்தத் தொடர் சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில் வரும் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பிப்ரவரி 3-வது வாரம் வரை நடைபெறும் இந்தத் தொடரில் 12 வயதுக்குட்பட்ட மற்றும் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில், 64 அணிகள் பங்கேற்கின்றன.

இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி அணியின் சந்தைப்படுத்தல் தலைவர் நீல் ஜெயராம், சென்னையின் எஃப்சியின் கோல்கீப்பிங் பயிற்சியாளர் ரஜத் குஹா, கோல்கீப்பர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in