லக்னோ அணிக்கு கேப்டனாகிறார் ரிஷப் பந்த்

லக்னோ அணிக்கு கேப்டனாகிறார் ரிஷப் பந்த்
Updated on
1 min read

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 21-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடருக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லக்னோ அணிக்கு கடந்த 3 சீசன்களில் கேப்டனாக கே.எல். ராகுல் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் 2025 சீசனில் ராகுல், லக்னோ அணியில் இருந்து வெளியேறினார். இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பந்த்தை, லக்னோ அணி நிர்வாகம் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதனிடையே, அவரை அணியின் கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

2021, 2022-ம் ஆண்டுகளில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் செயல்பட்டார். 2023-ம் ஆண்டில் விபத்தில் சிக்கி காயமடைந்ததால் அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in