இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கோடக்கை நியமிக்க பிசிசிஐ முடிவு

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கோடக்கை நியமிக்க பிசிசிஐ முடிவு
Updated on
1 min read

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக்கை நியமனம் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது.

சிதான்ஷு கோடக் தற்போது இந்திய கிரிக்கெட் ஏ அணி தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது கோடக்கை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு சிதான்ஷு கோடக் உள்ளிட்டோரின் பெயர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பயிற்சியாளராக கோடக் நியமிக்கப்படுவார் என அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in