ஷமி ரிட்டர்ன்ஸ்: இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஷமி ரிட்டர்ன்ஸ்: இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
Updated on
1 min read

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு காயம் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் இந்தியா வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வரும் 22-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரையில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்).

15 பேர் இடம்பெற்றுள்ள அணியில் சஞ்சு சாம்சன் பர்ஸ்ட் சாய்ஸ் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் அணியில் இடம்பெறவில்லை. காயத்தில் இருந்து பூரண குணமடைந்த ஷமி, அணியில் இடம்பிடித்துள்ளார். கடைசியாக கடந்த 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை அவர் மிஸ் செய்த நிலையில் தற்போது கம்பேக் கொடுத்துள்ளார். எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான அணியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in