அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டனாக நியமனம்

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டனாக நியமனம்
Updated on
1 min read

புதுடெல்லி: அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் வரும் 10-ம் தேதியும், 2-வது ஆட்டம் 12-ம் தேதியும், 3-வது மற்றும் கடை ஆட்டம் 15-ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த 3 ஆட்டங்களும் ராஜ்கோட்டில் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், வேகப்பந்து வீச்சு வீராங்கனை ரேணுகா சிங் தாக்குர் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக தீப்தி சர்மா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி ஷர்மா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா சேத்ரி, ரிச்சா கோஷ், தேஜல் ஹசப்னிஸ், ராகவி பிஸ்ட், மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், திதாஸ் சாது, சைமா தாக்கூர், சயாலி சத்கரே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in