டிக்கெட் தொகை ரூ.5.38 கோடியை திரும்ப வழங்குகிறது ஆஸி. வாரியம்

டிக்கெட் தொகை ரூ.5.38 கோடியை திரும்ப வழங்குகிறது ஆஸி. வாரியம்

Published on

பிரிஸ்பன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் தொடங்கியது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.

இந்த போட்டியை காண்பதற்காக 30,145 பேர் டிக்கெட் வாங்கியிருந்தனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளின்படி டெஸ்ட் போட்டியின் தினத்தில் குறைந்தபட்சம் 15 ஓவர்கள் வீசப்படாவிட்டால் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை 100 சதவீதம் திருப்பி வழங்க வேண்டும்.

இதன்படி 30,145 ரசிகர்களுக்கும் டிக்கெட்டின் முழுத் தொகை திரும்ப வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சுமார் ரூ.5.38 கோடியை திரும்ப வழங்க உள்ளது. மோசமான வானிலையால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் போட்டிகளை காப்பீடு செய்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in