குகேஷ் இந்த வெற்றியுடன் நிற்கமாட்டார்: மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு

குகேஷ் இந்த வெற்றியுடன் நிற்கமாட்டார்: மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: சிங்​கப்​பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் சீனா​வின் லிங் லிரெனை வீழ்த்தி சாம்​பியன் பட்டம் வென்​றார் இந்திய கிராண்ட் மாஸ்​டரான 18 வயதான டி.கு​கேஷ். இதன் மூலம் இளம் வயதில் உலக சாம்​பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை​யும் படைத்​தார் தமிழகத்​தைச் சேர்ந்த குகேஷ். இந்நிலை​யில் அவருக்கு, உலகின் முதல் நிலை வீரரரும் உலக சாம்​பியன்​ஷிப்​பில் 5 முறை பட்டம் வென்ற​வருமான நார்வே நாட்​டைச் சேர்ந்த பிரபல வீரரான மேக்னஸ் கார்​ல்சன் பாராட்டு தெரி​வித்​துள்ளார்.

இதுதொடர்பாக மேக்னஸ் கார்ல்சன் கூறிய​தாவது: குகேஷுக்கு இது ஒரு நம்ப​முடியாத சாதனை, முதலில் அவர் சென்னை​யில் நடைபெற்ற ஃபிடே சர்க்​யூட் போட்​டி​யில் தேவைக்கு தகுந்​தபடி வெற்றி பெற்​றார். அதன் பின்னர், கேண்​டிடேட்ஸ் போட்​டி​யில் அற்புதமான செயல்​திறனை வெளிப்​படுத்​தினார்.

உலக சாம்​பியன்​ஷிப்​பில் குகேஷ் தான் வெற்றி பெறு​வார் என எங்களில் பலர் நினைத்​தோம். ஆனால் பல சுற்றுகள் டிரா​வில் முடிவடைந்தன. இதை நாங்கள் எதிர்​பார்க்க​வில்லை. இறுதி சுற்றில் தனது பொசிஷனை உயிர்ப்​பிப்புடன் வைத்​திருப்​ப​தற்கான சிறந்த வேலையை குகேஷ் செய்து கொண்​டிருந்​தார். திடீரென்று எல்லாம் முடிந்​து​விட்​டது.

2 ஆண்டுகள் இந்த பட்டத்தை அவர், வைத்​திருப்​பார். உலக சாம்​பியன்​ஷிப்பை வென்​றுள்ளது அவருக்கு ஊக்கமளிக்​கும். இனிமேல் அவர், வரும் போட்​டிகளில் சிறந்த முடிவுகளை பெறு​வார். இப்போது அவர், உலகின் நம்பர் 2 வீரராக மாறக்​கூடும். எதிர்​காலத்​தில் முதல் நிலை வீரராகலாம். இது ​முடிந்து ​விட​வில்லை. இன்னும் பல வெற்றிகள் வந்து சேரும். இவ்​வாறு மேக்​னஸ் ​கார்ல்​சன்​ கூறினார்​.

குகேஷுடன் பட்டத்துக்கு மோதலா? - உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது குகேஷ் கூறும்போது, “உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுவிட்டதால் நான் சிறந்த வீரராக முடியாது. அது மேக்னஸ் கார்ல்சென் மட்டுமே.

அவர் அடைந்திருக்கும் உயரத்தை நான் அடைய வேண்டும். உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் அவருடன் விளையாடியிருந்தால் மிகவும் அற்புதமானதாகவும், கடும் சவால் நிறைந்ததாகவும் இருந்திருக்கும். உலகின் சிறந்த வீரருக்கு எதிராக என்னை நானே சோதித்துப் பார்க்க விரும்புகிறேன்” என்றார்.

இதுகுறித்து மேக்னஸ் கார்ல்சன் கூறும்போது, “நான் இனிமேல் அந்த சர்க்கஸின் ஒரு பகுதியாக இருக்கப்போவது இல்லை” என்றார். 5 முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் கடந்த 2023-ம் ஆண்டு தனது பட்டத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக விளையாட போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தார். தற்போதும் அந்த முடிவில் அவர், உறுதியுடன் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in