

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய துணைக் கண்டத்தில் உள்ள சூதாட்டத் தரகர்களுக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரசிகர் ஒருவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தியா பேட் செய்தபோது, அந்த நபர் 2 லேப் டாப் மற்றும் செல்போனை பயன்படுத்தி தகவல் பரிமாறியதாகக் கூறப்படுகிறது. போட்டி, தொலைக்காட்சியில் நேரடி ஒளிரபரப்பு செய்யப்பட்டாலும், அது சில விநாடிகள் தாமதமாகவே வரும். அதனால் செல்போன் மூலம் உடனுக்குடன் தகவலைப் பெற்று சூதாடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.