இந்தியா – ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் மோதும் பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து

இந்தியா – ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் மோதும் பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து
Updated on
1 min read

கான்பெர்ரா: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக 2 நாட்கள் கொண்ட பகலிரவு பயிற்சி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் மோத திட்டமிட்டு இருந்தது. இந்த ஆட்டம் கான்பெர்ரா மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. கடைசி நாளான இன்று மழை இல்லாமல் இருந்தால் இரு அணிகளும் 50 ஓவர்களை கொண்ட ஆட்டத்தில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in