சொன்னதை செய்தார் திலக் வர்மா: கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம்

சொன்னதை செய்தார் திலக் வர்மா: கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம்
Updated on
1 min read

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று முன்தினம் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற கடைசி மற்றும் 4-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் திலக் வர்மா 47 பந்துகளில் விளாசிய 120 ரன்கள் மற்றும் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் விளாசிய 109 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 284 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை திலக் வர்மா பெற்றார்.

போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன்சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: 3-வது இடத்தில் களமிறங்குவது என்பது திலக் வர்மா போன்ற இளம் வீரருக்கு சிறந்த வாய்ப்பு. அவர், அதிக நம்பிக்கையை அளிக்கிறார். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசினோம். அப்போது அவர், பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சொன்னது போன்றே களத்தில் செயல் திறனை காட்டியுள்ளார். செஞ்சூரியன் போட்டியிலும் தற்போது ஜோகன்னஸ்பர்க்கிலும் திலக் வர்மா பேட்டிங் செய்த விதம் நம்பமுடியாதது. டி20 போட்டிகளில் மட்டுமின்றி அனைத்து வடிவங்களிலும் அவர், இந்த செயல் திறனை தொடர்வார் என நம்புகிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in