Published : 27 Jun 2018 03:55 PM
Last Updated : 27 Jun 2018 03:55 PM

கிரிக்கெட்டுக்கு 100 கோடி ரசிகர்கள்; 90% துணைக்கண்டத்தில்: ஐசிசி ஆய்வில் தகவல்

உலகம் முழுதும் கிரிக்கெட்டுக்கு எத்தனை ஆதரவு இருக்கிறது என்று ஐசிசி நடத்திய சந்தை ஆய்வில் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக கிரிக்கெட்டை ரசிகர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது, இதில் 90% துணைக்கண்ட ரசிகர்கள். ரசிகைகளின் எண்ணிக்கை 39%.

14 நாடுகளில் சுமார் 1 பில்லியன் பேர் கிரிக்கெட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், இதில் 90% துணைக்கண்ட ரசிகர்கள்.

உலகம் முழுதும் 100கோடிக்கும் மேல் கிரிக்கெட் ரசிகர்கள். 300 மில்லியன் பங்கேற்பாளர்கள், 39% பேர் ரசிகைகள் என்பது ஐசிசி உற்சாக அறிக்கை வெளியிடும் சந்தை ஆய்வுத் தகவலாகும்.

இந்த ஆய்வு 12 முழு உறுப்பு கிரிக்கெட் நாடுகள், சீனா, மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது. சீனாவும் அமெரிக்காவும் கிரிக்கெட்டுக்கு பெரிய ஆதரவு இருக்கும் நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

டேவ் ரிச்சர்ட்சன் கூறும்போது, “டி20 கிரிக்கெட்டை பயன்படுத்தி கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார். நம் உறுப்பினர்களில் 75% டி20 கிரிக்கெட்தான் ஆடுகின்றனர். ஆகவே கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்த டி20 வடிவமே சிறந்தது. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டையும் ரசிகர்கள் அதிகம் நேசிப்பது சர்வேயில் தெரியவந்தது. ஆனாலும் கிரிக்கெட் வளர்ச்சிக்கு டி20தான் சிறந்த வழிமுறை, உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் அல்ல.

 

மேலும், ஐசிசி நடத்தும் தொடர்களுக்கு ஏகோபித்த வரவேற்பு இருப்பதாகவும் ஒப்பிடும்போது இருதரப்பு கிரிக்கெட் தொடர்களுக்கும் உள்நாட்டு டி20க்கும் கூட ஐசிசி தொடர் அளவுக்கு வரவேற்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்ததாக ஐசிசி அறிக்கை கூறுகிறது. 95% ரசிகர்கள் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையில் பெரிதும் ஆர்வம் காட்டியிருப்பதாகத் தெரிகிறது.

87% கிரிக்கெட் ரசிகர்கள் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தேவை என்று கருதுகின்றனர்.

68% ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டியுள்ளனர், 65% மகளிர் உலகக்கோப்பையில் ஆர்வம் காட்டியுள்ளனர், 70% ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட் லைவ் கவரேஜ் வேண்டும் என்று விரும்பியுள்ளனர்.

கிரிக்கெட் அல்லாத ரசிகர்கள் பலரிடம் ஆய்வு நடத்தியதில் கிரிக்கெட்டை இன்னும் எளிமையாக நடத்துங்கள், கிரிக்கெட் போட்டி அட்டவணைகளை இன்னும் எளிதாக்குங்கள் என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x