‘கிரிக்கெட் கிங்’ விராட் கோலியின் பிறந்தநாள்: மறக்க முடியாத தனித்துவ சாதனைகள்!

‘கிரிக்கெட் கிங்’ விராட் கோலியின் பிறந்தநாள்: மறக்க முடியாத தனித்துவ சாதனைகள்!
Updated on
1 min read

‘கிரிக்கெட் உலகின் அரசன்’என தன் ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இன்று அவருக்கு பிறந்த நாள்.

அவரது 36- வது பிறந்த நாளை முன்னிட்டு இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவர் படைத்துள்ள தனித்துவ சாதனைகள் சிலவற்றை பார்ப்போம்.

  • கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 765 ரன்களை எடுத்திருந்தார் கோலி. அதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இது அமைந்தது.
  • கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 50-வது சதமாகும். இந்த பார்மெட்டில் அதிக சதம் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார்.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 267 இன்னிங்ஸில் 13,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 39 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.
  • டி20 உலகக் கோப்பை, உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களை வென்ற இந்திய அணியில் விளையாடியவர்.
  • அண்மையில் முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. இருப்பினும் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வீழும் போதெல்லாம் எழுச்சி காண்பது அவரது இயல்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in