Last Updated : 15 Jun, 2018 03:49 PM

 

Published : 15 Jun 2018 03:49 PM
Last Updated : 15 Jun 2018 03:49 PM

யோயோ டெஸ்ட்டில் கோலி, தோனி... கோலியின் கழுத்து காயம் என்னாயிற்று? தகவல் இல்லை

ஜூன் 27ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து தொடருக்கான யோயோ உள்ளிட்ட உடற்தகுதி டெஸ்ட்டில் தோனி, விராட் கோலி ஆகியோர் பங்கேற்றனர், ஆனால் விராட் கோலி கழுத்து காயம் என்னவானது? தகவல் எதுவும் இல்லை.

ஐபிஎல் போட்டிக்குப் பிறகே கழுத்துக் காயம் அடைந்த விராட் கோலி, சரே அணியுடனான கவுண்டி கிரிக்கெட்டிலும் பங்கேற்க முடியவில்லை, ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க முடியவில்லை.

எந்தத் தொடராக இருந்தாலும் வீரர்களின் உடற்தகுதியை நிர்ணயம் செய்யும் அளவுகோலாக யோயோ டெஸ்ட் இப்போது பிசிசிஐயினால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதில் தோல்வியடைந்ததால்தான் மொகமது ஷமி ஆப்கானுக்கு எதிராக ஆட முடியாமல் போயுள்ளது

இந்நிலையில் தோனி, கோலி, ரெய்னா, புவனேஷ்வர் குமார், காயமடைந்த கேதார் ஜாதவ் (இவர் இங்கிலாந்து செல்லும் அணியில் இல்லை) ஆகியோர் முதல் பேட்சில் யோயோ டெஸ்ட் மேற்கொண்டனர்.

இதில் குறைந்தப்பட்ச தகுதி ஸ்கோர் 16.1 ஆகும். இதில் தோனிக்குச் சரிசமமாக கோலி ஓடினார். ஆகவே அவருக்கு இதில் பிரச்சினையில்லை என்பது தெரிந்தது.

ஆனால் டெஸ்ட்டுக்குப் பிறகு கோலியின் கழுத்து, தோள்பட்டை வலி எப்படி இருந்தது என்பது பற்றி தகவல்கள் இல்லை.

கழுத்து மற்றும் தோள்பட்டைக் காயத்திலிருந்து கோலி குணமடைவதுதான் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் அவரது இடம் தீர்மானிக்கப்படும்.

இங்கிலாந்து தொடர் மிகவும் நெருக்கமான அமைக்கப்பட்ட தொடராகும், 3 டி20, 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகளில் அங்கு ஆடியாக வேண்டும்.

கோலி, தோனி பேட்சுக்குப் பிறகு பும்ரா, சித்தார்த் கவுல், வாஷிங்டன் சுந்தர், சாஹல், மனீஷ் பாண்டே ஆகியோரும் டெஸ்ட் மேற்கொண்டனர்.

ஆனால் இந்த டெஸ்ட்களின் போது மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x