Published : 20 Jun 2018 12:36 PM
Last Updated : 20 Jun 2018 12:36 PM

டிக்ளேர் செய்யலாம், பாலோ ஆன் கொடுக்கலாம்.. அடப்பாவமே ஆஸி.க்கா இந்த கதி: ஆஸி.தோல்வி குறித்து கங்குலி உட்பட அப்படித்தான் கூறுகிறார்கள்..

ஒருகாலத்தில் ஒருநாள் போட்டிகளில் 242 ரன்கள் என்பது வெற்றி பெறும் ரன் எண்ணிக்கையாகும் ஆனால் நேற்று ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 242 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது.

481 ரன்கள் குவித்தது இங்கிலாந்து இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 238 ரன்களுக்கு மடிந்தது. இது கிரிக்கெட் உலகில் கலவையான எதிர்வினைகளை வரவேற்றுள்ளது. மைக்கேல் வான்,சவுரவ் கங்குலி, ஆடம் கில்கிறிஸ்ட் உட்பட பலரும் ட்வீட் செய்து அங்கலாய்த்துள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளிலேயே 481 ரன்களை அடிக்கும் திணறி வரும் இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் 481 ரன்களா என்றும் சில தரப்பினர் கேலி செய்யவும் தவறவில்லை.

மைக்கேல் வான்:

இங்கிலாந்து டிக்ளேர் செய்... இங்கிலாந்து பேசாமல் ஆஸி.க்கு ஃபாலோ ஆன் கொடுக்கலாம்

ஆடம் கில்கிறிஸ்ட்:

கிரேட் ஜாக் காலிஸிடமிருந்து ஒரு மேற்கோளைக் களவாடிக் கூற வேண்டுமெனில் ‘10 ரன்கள் குறைவு’

ஷேன் வார்ன்:

எழுந்திருந்து இங்கிலாந்து ஸ்கோரைப் பார்த்தேன். என்ன எழவுதான் அங்கு நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது பாய்ஸ்?

சவுரவ் கங்குலி வருத்தம்:

50 ஓவர்களில் ஏறக்குறைய 500 ரன்கள் குவிப்பது எனக்கு அச்சமூட்டுகிறது. அதாவது ஆட்டத்தின் ஆரோக்கியம் குறித்து கவலை ஏற்படுகிறது, எங்கு சென்று கொண்டிருக்கிறது? எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் ஆஸ்திரேலியப் பந்து வீச்சுக்கே இந்தக் கதி என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. லில்லி, தாம்சன், ரிச்சி பெனோ போன்ற பவுலர்களை கிரிக்கெட்டுக்கு அளித்த நாடு.

மெக்ரா, லீ, வார்ன், மெக்டர்மட், கில்லஸ்பி... ஆகிய பவுலர்களைக் கொண்டு வந்த ஆஸி.யிலிருந்து இவ்வளவு சாதாரண பவுலிங் என்பது நரம்புத்தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. கிரிக்கெட் பிழைக்க வேண்டுமெனில் நல்ல பவுலிங் அவசியம், அது மடிந்து வருகிறதா? நிச்சயமாக அப்படியிருக்கக் கூடாது. அவர்கள் இன்னும் திறமையானவர்கள், கிரிக்கெட்டின் சக்திவாய்ந்த நாட்டில் இன்னும் சிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்

டேல் நிமோ என்பவர் கிண்டலாக, “இல்லை இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இருக்காது, ஆஸ்திரியாவுக்கு எதிராக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x