இந்திய பவுலர்கள் வேகத்திற்கே மூக்குடைபட்டால் மிட்செல் ஜான்சனிடம் என்ன செய்வார்கள்? - பாய்காட் கேள்வி

இந்திய பவுலர்கள் வேகத்திற்கே மூக்குடைபட்டால் மிட்செல் ஜான்சனிடம் என்ன செய்வார்கள்? - பாய்காட் கேள்வி
Updated on
1 min read

இங்கிலாந்து லார்ட்ஸ் டெஸ்ட் போட்டித் தோல்விக்குப் பிறகு மீண்டெழுந்த இங்கிலாந்தைப் பாராட்டும் ஜெஃப் பாய்காட், ஷாட் பிட்ச் பந்துகளுக்கு எதிரான இங்கிலாந்து வீரர்களின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பிராட் தொடர்ந்து ஹூக் ஷாட் ஆடி, கடைசியில் வருண் ஆரோன் பவுன்சரில் மூக்குடை பட்டார். இது இங்கிலாந்து அணியினரின் ஒட்டுமொத்த ஷாட் பிட்ச் பந்தை எதிர்கொள்வதான பலவீனத்தைக் காட்டுகிறது.

ஆரோனின் 2 பவுன்சர்களை அவர் சிக்சருக்கு அடித்தாலும் அந்த ஷாட்களில் கூட அவர் முழுக்கட்டுப்பாட்டுடன் இருந்ததாகத் தெரியவில்லை. இவர் மட்டுமல்ல இங்கிலாந்து வீரர்களுக்கே ஷாட் பிட்ச் பந்துகள் பிடிபடவில்லை.

மொயீன் அலிக்கு ஹூக் செய்வதா, குனிவதா என்று தெரியவில்லை. தலையைத் திருப்பிக் கொள்கிறார் அதன் பிறகு நடப்பது நடக்கட்டும் என்று இருக்கிறார். ஓல்ட் டிராபர்டில் அலிஸ்டர் குக் ஷாட் பிட்ச் பந்தை நேராக ஃபைன்லெக் திசையில் குறிபார்த்து கேட்சிற்கு அடிக்கிறார்.

ஜோ ரூட், வருண் ஆரோன் ரவுண்ட் த விக்கெட்டில் வீசும்போது ஹெல்மெட்டில் அடி வாங்கினார். அருமையாக ஆடிய இயன் பெல் கூட ஷாட் பிட்ச் பந்திற்கு திணறுகிறார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 3 வீரர்கள் ஹூக் செய்து விக்கெட்டுகளை இழந்தனர். பென் ஸ்டோக்ஸ் இரண்டு இன்னிங்சிலும் டக் அவுட் ஆனார். பிரையர், ரூட் என்று ஹூக் செய்து ஆட்டமிழந்தனர்.

இப்படி இந்திய பந்து வீச்சாளர்கள் வீசும் ஷாட் பிட்ச் பந்துகளுக்குத் திணறினால் அடுத்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சனின் ஆக்ரோஷ பந்து வீச்சை எப்படி இங்கிலாந்து வீரர்கள் எதிர்கொள்ளப்போகின்றனர்”

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in