Published : 19 Jun 2018 07:22 PM
Last Updated : 19 Jun 2018 07:22 PM

தோனியின் சாம்பியன் சிஎஸ்கே மதிப்பு மிக்க பிராண்ட்: ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 37% அதிகரிப்பு

65 மில்லியன் டாலர்கள் பிராண்ட் மதிப்புடன் கேப்டன் தோனியின் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2018 தொடரின் மதிப்பு மிக்க பிராண்டாக எழுந்துள்ளது.

8 ஐபிஎல் அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமிருந்து மதிப்பு மிக்க பிராண்ட் என்ற தகுதியை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றது. இந்த பிராண்ட் வேல்யூ ஆய்வை நடத்தியது பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற முன்னணி பிராண்ட் மதிப்பு ஆய்வு நிறுவனமாகும்.

தோனி தலைமை சிஎஸ்கே அணி 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பிராண்ட் மதிப்பு கொண்டது, 2ம் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸைக் காட்டிலும் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சிஎஸ்கே அதிக பிராண்ட் வேல்யூ கொண்டது.

3ம் இடம் 54 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பிராண்ட் மதிப்பை விட 2018-ல் 16% சன் ரைசர்ஸ் பிராண்ட் மதிப்புக் கூடியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிராண்ட் மதிப்பு வகையில் பெரிய வெற்றி கிட்டவில்லை. இவர்கள் கடந்த ஆண்டு 4-ம் இடத்தில் இருந்தனர், தற்போது 4ம் இடத்துக்கு சரிந்துள்ளனர். பிராண்ட் மதிப்பு 53 மில்லியன் டாலர்கள்.

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு விவரம் வருமாறு:

சென்னை சூப்பர் கிங்ஸ் - 65 மில்லியன் டாலர்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- 62 மில்லியன் டாலர்கள்

சன் ரைசர்ஸ் - 54 மில்லியன் டாலர்கள்

மும்பை இந்தியன்ஸ்- 53மில். டாலர்கள்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு- 49 மில். டாலர்கள்

டெல்லி டேர் டெவில்ஸ் - 44மில் டாலர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் - 43 மில் டாலர்கள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 40 மில்லியன் டாலர்கள்.

பிராண்ட் மதிப்பின் படி ஐபிஎல் 5.3 பில்லியன் டாலர்கள் பிராண்ட் மதிப்புடையது. கடந்த 11 ஆண்டுகளில் ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 37% அதிகரித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னை அழகாக விற்றுக் கொண்டது, இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸுக்கு ஆடிய ஹர்பஜன் சின் மராத்தியில் ட்வீட் போடுவது, மும்பை கிம்பை என்றெல்லாம் ட்வீட் போட்டதில்லை, ஆனால் சென்னை அணிக்கு வந்தவுடன் தமிழில் ட்வீட் போடுவதை ஆரம்பித்தார், இம்ரான் தாஹிர் உள்ளிட்டோர் தமிழில் ட்வீட் போட வைக்கப்பட்டனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் அதன் பிராண்ட் வேல்யூ அதிகரித்துள்ளது. சென்னையைத் தாண்டியும் புனேவுக்கு ரயிலில் ரசிகர்களை அழைத்து சென்றது போன்றவைகல் பிராண்ட் பில்ட் அப் மார்க்கெட்டிங் நடவடிக்கைகளே.

சிஎஸ்கே கிரிக்கெட்டுடன் கூடவே தன் பிராண்ட் மதிப்பை கூட்டுவதில் அதிக நாட்டம் செலுத்திவந்தது, காரணம் யாராக இருக்க முடியும் எம்.எஸ்.தோனிதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x