Published : 29 Jun 2018 09:43 PM
Last Updated : 29 Jun 2018 09:43 PM

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் தேர்வு

ஜூலை 12ம் தேதி டிரெண்ட் பிரிட்ஜில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 12-ல் டிரெண்ட் பிரிட்ஜிலும் ஜூலை 14-ல் லார்ட்சிலும் ஜூலை 17-ல் லீட்ஸிலும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சும் அதிரடி இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணி வருமாறு:

இயான் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, பேர்ஸ்டோ, ஜேக் பால், ஜோஸ் பட்லர், டாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லே, மார்க் உட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x