ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: டெல்லி அணி தடுமாற்றம்

யஷ் துள்
யஷ் துள்
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழக அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இந்தப் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 18-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 6 விக்கெட் இழப்புக்கு 674 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய டெல்லி அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. யஷ் துள் 103, பிரான்ஷு விஜய்ரன் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in